rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

7/29/08

முட்டை- pod Egg-pod

apple i-pod ஜ பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆனால் egg pod எண்டு ஒன்றும் இருக்குது எண்டு தெரிந்தால் சரி.

7/13/08

திருமண ஆடை தெரிவு செய்யும் விடையத்தில் கவனம் செலுத்துவது யார்?

எனது கருத்து திருமண ஆடைவிடயத்தில்அதிக அக்கறை காட்டுவது பெண்கள்தான். பொதுவாக அவர்கள் 6மாதத்திற்கு முன்பே ஆடைஎடுக்க தொடங்கிவிடுவர். ஏன் சாதாரணமாக ஆடை எடுப்பதற்கே சேல்ஸ்மனை படுத்தும்பாடு.இந்த கேள்வியை ஒரு பிரபல புடவை வர்த்தகரை கேட்டேன் அவர் சொன்ன கருத்தும் எனது கருத்தும் ஒன்றுதான். உங்கள் பலபேருக்கு அனுபவங்கள் கூட இருக்கலாம். உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன்..

7/12/08

நீர்புகாத நவீன கையடக்க கணனி

பிரபல மின்ணணு பொருள் தயாரிப்பு நிறுவனமான பனசொனிக் நீர்புகாத நவீன கையடக்க கணனியை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது.Toughbook CF-U1 என இதற்கு பெயரிட்டிருக்கினம்.7அங்குல அகலம். 6 அங்குல நீளம். 2அங்குல விட்டம் கொண்டதாக செய்யப்பட்டுள்தால் மிக சின்னதாக தெரிகின்றது.
நீர் போகாத இக்கணனியை 1.2 மீற்றர் உயரத்தில்இருந்து கீழ போட்டாலும் உடையாதாம்.இன்டல் நிறுவனத்தின் அட்டம் உள்ளடக்கிய இக்கணனி வருகிற ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வர உள்ளது. அறிமுகவிலை 2499 டொலர் பாருங்கோ.

7/11/08

இலவச Domain

இலவச Domain சேவையை DotTK என்ற இணையத்தளம் இலவசமாக வளங்குகின்றது. உதாரணமாக எனது தளத்தை எடுத்துக்கொள்வோம். www.vidupu.blogspot.com என்பது எனது blog முகவரியாகும். இந்த முகவரியை www.vidupu.tk என்ற முகவரியில் parking செய்துள்ளேன்.உங்களது எந்த முகவரியையும் .tk ற்கு park பண்ணலாம். முகவரியை பெற கீழ் சொடுக்கவும்

7/10/08

நெல்லையில் நமீதாவுக்கு கோயில்


ஏற்கனவே குஸ்புவுக்கு திருச்சிக்கு அருகே கோவில் கட்டி தங்கள் ரசிப்புத் திறணை பறைசாற்றியவர்கள்
கவர்ச்சி நடிகை நமீதாவுக்கு நெல்லையில் கோயில் கட்டும் பணி ஆரம்பித்துள்ளது. ஜோனி என்ற ரசிகரே இதனை ஆரம்பித்துள்ளார். இவருக்கு கோயில்கட்ட ஒரு கூட்டமே அலைந்து கொண்டிருந்தது. ஆனால் எனக்கு கோயில் வேண்டாம் நெஞ்சில் இடம் கொடுத்தால் போதும் என கெஞசிக் கேட்டுக் கொண்டாராம் நமீதா. ஆனால் அதனையும் மீறி இந்த ரசிகர்கள் நெல்லைக்கு அருகே நமீதாவுக்கு கோயில் கட்டி வருகிறார்களாம். நமீதாவை வைத்தே திறக்கும் திட்டமாம். அப்படி அவர் வராவிட்டால் பெரிய சாமியார் யாரையாவது வைத்து கும்பாபிடேகம் நடத்தும் திட்டமாம்.(சாமியார் எல்லாம் இதேவேலையாத்தான் திரியினமாக்கும்)
இப்படியெல்லாம் கட்டவேண்டியது அவசியமோ?? உங்கள் கருத்து என்ன?

7/9/08

சோப்பு வீணாவதை தடுக்க புதிய கவர்

அனேகமாக நாம் சோப்பு பாவித்துவிட்டு அதன் கேஸ்சில் வைக்கும்போது தண்ணீருடன் கரைந்து வீணாக செல்லுகின்றது.(மாதத்தில் ஒருதடவை குளிக்கிறவை கவலைபட தேவையில்லை). இவ்வாறு கரைந்து செல்லும் சோப்பை சேமித்து மீள பாவிக்ககூடியவாறு ஒரு சோப் தாங்கி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

7/8/08

வார்னர் உடன் நோக்கியா இசை ஒப்பந்தம்

உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா, வார்னர் இசைக் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
`கம்ஸ் வித் மியூசிக்' மற்றும் நோக்கியா மியூசிக் ஸ்டோர் இணைந்து வார்னர் இசை பேனரைப் பயன்படுத்த இருப்பதாக நோக்கியா வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
நோக்கியாவின் தற்போதைய இசையானது, சந்தையில் உள்ள மற்ற செல்போன் நிறுவனங்களில் இருந்து வேறுபட்டிருப்பதால், செல்போன் பயனர்கள் கடந்த 12 மாதங்களில் டவுன்லோட் செய்த அனைத்து இசையையும் சேமித்து வைக்கக் கூடிய வகையில் ஒப்பந்தம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இசை நிறுவனங்களின் நலனையும் ஒன்றிணைக்கும் வகையில் முதல் அடிப்படை முயற்சியாகும் இது என்று வார்னர் இசைக் குழுமத்தின் தலைமை நிர்வாகி எட்கார் பிராஃப்மேன் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் யுனிவர்சல் நிறுவனத்துடனும், சோனி பிஎம்ஜி நிறுவனத்துடன் ஏப்ரல் மாதத்திலும் மியூசிக் டிராக்கை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நோக்கியா ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் சேவைகள் இந்த ஆண்டின் 2ம் பாதியில் நடைமுறைக்கு வரவுள்ளன.
2007ம் ஆண்டில் இசை டவுன்லோட் சந்தையானது 2.9 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டில் நோக்கியா நிறுவனம் சுமார் 146 மில்லியன் மியூசிக் போன்களை விற்பனை செய்துள்ளது.

7/6/08

கணனி விளையாட்டுக்குத் தடை

பூட்டானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பணி நேரத்தில் கணனி விளையாட்டுக்களில் மும்மரமாக ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற மறைப்பாடுகளையடுத்து அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடமைக்கு 'லப்டொப்' எடுத்துவருவதற்கு தடை விதித்துள்ளது.
சபாநாயகர் விபரிக்கையில் பிரைச்சினைகள் தொடர்பில் தீவிரமாக விவாதங்கள் நடைபெறுகையில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பரர் தமது 'லப்டொப்' கணனி விளையாட்டுக்களில் ஈடுபடுவதை நான் கண்டிருக்கிறேன் என கூறினார்.
எப்படிப்போகுது நடப்பு.

7/4/08

மாடி கட்டடம் கூட சுழலப்போகின்றது..

உலகின் முதலாவது சுழலும் மாடிக் கட்டிடமொன்றை துபாயில் ஸ்தாபிப்பதற்கான திட்டம் கட்டிடக் கலைஞர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
420 மீற்றர் உயரமான இந்த 80 மாடிக் கட்டிடமானது நியூயோர்க்கைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் டேவிட் பிஷரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தின் மாடிகளுக் கிடையில் சுழலும் இயந்திர சாத னங்கள் பொருத்தப்பட்டுள்ளதால், ஒவ்வொரு மாடியையும் விரும்பிய திசைக்கு திருப்ப முடியும் என டேவிட் பிஷர் கூறுகிறார்.
இந்தச் சுழலும் மாடியிலுள்ள ஒவ்வொரு குடியிருப்பு அலகும் ஒரு சதுர அடிக்கு 3000 டொலர் வீதம், 4 மில்லியன் டொலரிலிருந்து 40 மில்லியன் டொலர் வரையான விலைக்கு விற்பனையாகவுள் ளது. மேற்படி சுழலும் மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணிகள் 2010 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இப்படி கட்டினால் எப்படி இருக்கும்?.
மேலும் இதைப்பற்றி விவரங்கள் உங்களுக்கு தெரிஞ்சா பின்னூட்டத்தில போடுங்கோ.

7/3/08

அவுட்சோர்சஸிங் ஜ நிறுத்தும் நிறுவனங்கள்

தகவல் தொழில்நுட்பப் பணிகளை அவுட்சோர்ஸ் செய்து வரும் நிறுவனங்களில் சில, தங்களது வாடிக்கையாளர் சேவைகளை தங்கள் சொந்த நாட்டிற்குள்ளேயே வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
பிரிட்டனில் உள்ள முன்னணி டெலிகாம் நிறுவனமான ஆரஞ்ச் யு.கே. நிறுவனம், இந்திய கால்சென்டருக்கு அவுட் சோர்ஸிங் செய்வதை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தது.
அதேபோல் நியூஸீலாந்தின் வங்கி ஒன்றும், பிரிட்டனின் மற்றொரு நிறுவனமும் வாடிக்கையாளர் தொடர்பு அவுட்சோர்சிங் பணிகளை தங்கள் நாட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளன.
வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான, தரமான சிறந்த சேவைகளை வழங்கும் வண்ணம் இந்த முடிவுகளை இந்த நிறுவனங்கள் எடுத்திருப்பதாக "Black Book of Outsourcing" வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் யு.கே டெலிகாம் நிறுவனம் பிரிட்டனின் சிறந்த வாடிக்கையாளர் சேவை நிறுவனமாக பெயர் எடுக்க இலக்கு கொண்டுள்ளதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் டாம் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

7/2/08

முக்கிய நிகழ்ச்சிகளை நினைவு படுத்தும் இணையதளம்

பரபரப்பான வாழ்கையில் நாம் சில முக்கிய நிகழ்ச்சிகளை மறந்து போகின்றோம்.ஆனால் நாம் அன்றாடம் உறவாடம் computer உம் இணையத்தளமும் நினைவுபடுத்த மறக்காது. http://www.remime.com என்ற இணையத்தளம் இவ் பணியை செய்கின்றது.

இதன் பணிகளை பார்த்தால் நிச்சயம் இதனை பன்படுத்திக்கொள்ள முடிவு செய்வீர்கள்.இந்த சேவை வேற இலவசமாக கிடைக்கின்றது. வளமையாக Register பண்னுவதைப்போலதான் ஆனால் Time zone சரியாக நிறுவுவது முக்கியம். செய்து பார்த்துவிட்டு பின்னூட்டமிட மறக்காதையுங்கோ..