தகவல் தொழில்நுட்பப் பணிகளை அவுட்சோர்ஸ் செய்து வரும் நிறுவனங்களில் சில, தங்களது வாடிக்கையாளர் சேவைகளை தங்கள் சொந்த நாட்டிற்குள்ளேயே வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
பிரிட்டனில் உள்ள முன்னணி டெலிகாம் நிறுவனமான ஆரஞ்ச் யு.கே. நிறுவனம், இந்திய கால்சென்டருக்கு அவுட் சோர்ஸிங் செய்வதை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தது.
அதேபோல் நியூஸீலாந்தின் வங்கி ஒன்றும், பிரிட்டனின் மற்றொரு நிறுவனமும் வாடிக்கையாளர் தொடர்பு அவுட்சோர்சிங் பணிகளை தங்கள் நாட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளன.
வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான, தரமான சிறந்த சேவைகளை வழங்கும் வண்ணம் இந்த முடிவுகளை இந்த நிறுவனங்கள் எடுத்திருப்பதாக "Black Book of Outsourcing" வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் யு.கே டெலிகாம் நிறுவனம் பிரிட்டனின் சிறந்த வாடிக்கையாளர் சேவை நிறுவனமாக பெயர் எடுக்க இலக்கு கொண்டுள்ளதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் டாம் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment