உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா, வார்னர் இசைக் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
`கம்ஸ் வித் மியூசிக்' மற்றும் நோக்கியா மியூசிக் ஸ்டோர் இணைந்து வார்னர் இசை பேனரைப் பயன்படுத்த இருப்பதாக நோக்கியா வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
நோக்கியாவின் தற்போதைய இசையானது, சந்தையில் உள்ள மற்ற செல்போன் நிறுவனங்களில் இருந்து வேறுபட்டிருப்பதால், செல்போன் பயனர்கள் கடந்த 12 மாதங்களில் டவுன்லோட் செய்த அனைத்து இசையையும் சேமித்து வைக்கக் கூடிய வகையில் ஒப்பந்தம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இசை நிறுவனங்களின் நலனையும் ஒன்றிணைக்கும் வகையில் முதல் அடிப்படை முயற்சியாகும் இது என்று வார்னர் இசைக் குழுமத்தின் தலைமை நிர்வாகி எட்கார் பிராஃப்மேன் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் யுனிவர்சல் நிறுவனத்துடனும், சோனி பிஎம்ஜி நிறுவனத்துடன் ஏப்ரல் மாதத்திலும் மியூசிக் டிராக்கை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நோக்கியா ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் சேவைகள் இந்த ஆண்டின் 2ம் பாதியில் நடைமுறைக்கு வரவுள்ளன.
2007ம் ஆண்டில் இசை டவுன்லோட் சந்தையானது 2.9 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டில் நோக்கியா நிறுவனம் சுமார் 146 மில்லியன் மியூசிக் போன்களை விற்பனை செய்துள்ளது.
No comments:
Post a Comment