rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

1/21/08

கிரிக்கற்








நண்பர் இ-மெயிலில் அனுப்பியிருந்தார் அது உங்களுக்கும்


12/29/07

அவுட்சோர்சிங் துறையில் பெருகும் உடற்கோளாறுகள்

கால்சென்டர் உள்ளிட்ட அவுட்சோர்சிங் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் உடல் நிலையில் கோளாறுகள் பெருகி வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கால்சென்டர்கள் தவிர மென்பொருள் தயாரிப்புத் துறை, மெடிகல் டிரான்ஸ்கிரிப்ஷன் மற்றும் இன்னபிற அவுட்சோர்சிங் துறைகளில் ஆண்கள், பெண்கள் உட்பட 1.6 மில்லியன் இளம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
20லிருந்து 30 வயதுக்குள் மட்டுமே இருக்கும் இந்த ஊழியர்கள் மற்ற துறையில் இதே வயதில் பணியாற்றும் ஊழியர்களைக் காட்டிலும் அதிகம் சம்பாதிக்கின்றனர்.
ஆனால் இவர்களுக்கு தூக்கமின்மை, இருதய நோய், மன உளைச்சல் ஆகிய தொந்தரவுகள் அதிகம் ஏற்படுகிறது. இதோடு மேலும் முக்கியமாக குடும்பத்துடன் இவர்களால் ஒட்டுதல் ஏற்படுத்தி கொள்ள முடிவதில்லை. இதனால் குடும்பத் தகராறுகள் ஏற்படுவதாக பல சமூகவியலாளர்கள் கூறி வருகின்றனர்.
சக்தி வாய்ந்த ஒரு பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்து கொண்டிருப்பதில், தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் பெருகும் வருவாய் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், ஊழியர்களின் ஆரோக்கியம் இந்த துறைக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று சிந்திக்க தொடங்கியுள்ளனர்.
2005 ஆம் ஆண்டில் இருதய நோய், வாதம், நீரிழிவு ஆகிய நோய்களால் மட்டுமே உற்பத்தித் திறன் 9 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆரோக்கியம் குறித்த இத்தகைய போக்கு தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் உற்பத்தித் திறன் இழப்பு 200 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு உயரும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கென்றே பிரத்யேகமான மருத்துவக் கொள்கையை அறிமுகம் செய்யவேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அமர்ந்தபடியே பணியாற்றுவதாலும், பணிச்சுமை உள்ளிட்ட பணியிட சூழல்களால் மன அழுத்தமும், இருதய நோயும், ஜீரணக் கோளாறுகளும், உடல் எடை கூடுதலும் ஏற்படுகின்றன.

12/13/07

இன்டர்நெட்டினால் ஏற்படும் மன உளைச்சல்

இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதால் மன உளைச்சல் ஏற்படும் என்று டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மன நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் பின் ஹாஸ் டேனன் என்பவர் ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்துள்ளார்.
உலகம் முழுதும் இணையதளத்தை பயன்படுத்துவோரில் 10 சதவீதம் பேர் இணையதள அடிமைகளாக உள்ளனர் என்று இவர் மேற்கொண்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
புகைப்பழக்கத்திற்கு அடிமை, மது பழக்கத்திற்கு அடிமை, காபிக்கு அடிமை போன்று இப்போது இந்த இணையதளத்திற்கு அடிமையாவதும் ஒரு நோய்க்கூறாக வளர்ந்து வருகிறது என்று டாக்டர் டேனன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்டர்நெட் அடிக் ஷன் டிஸ்ஸார்டர் என்று அவர் குறிப்பிடும் இந்த நோயால் பலருக்கு மிதமானது முதல் தீவிர மன உளைச்சல் ஏற்படுகிறது என்று அவர் கூறுகிறார்.
இந்த நோய் உண்மையிலேயே ஒருவரை பீடித்திருக்கிறதா என்பதை அறிய மற்ற சில அடிமைப் பழக்கம் போலவே இதனையும் வகைப்படுத்த வேண்டியுள்ளது என்கிறார். அதாவது போதைப்பழக்கம், சூதாட்டத்திற்கான விழைவு, அதிகப்படியான காமத்திற்கான விழைவு ஆகியவற்றுடன் இந்த இணையதள அடிமை நோயையும் வகைப்படுத்த வேண்டியுள்ளது என்று கூறுகிறார் டாக்டர் டேனன்.
ஒரு சிலர் தொடர்ந்து செய்த வேலையையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பர். அதாவது எப்போதாவது எதையாவது சுத்தம் செய்து கொண்டே இருப்பது. வீட்டில் தண்ணீர் கொஞ்சம் தீர்ந்தாலும் உடனுக்குடன் அதனை நிரப்பி வைப்பது போன்ற அப்ஸஸிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டர் (Obsessive Compulsive Disorder) வகையில் இந்த இணையதள மோக நோயையும் மன நோய் நிபுணர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.
எனக்கெண்டால் தொடர்ந்து பயன்படுத்துவதால் மன உளைச்சல் ஏற்படுவதில்லை உங்களுக்கு ?

11/30/07

15.4 இன்ச் லேப்-டாப்: டெல் அறிமுகம்

கணினி தயாரிப்பில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் டெல் நிறுவனம், 15.4 இன்ச் அகலம் உள்ள திரையை கொண்ட மடிக்கணினியை (லேப்-டாப்) அறிமுகப்படுத்தியுள்ளது.
'XPS M1530' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மடிக்கணினியின் துவக்க விலை ரூ.53,000 என்றும், இதன் தடிமன் ஒரு இன்ச் மட்டுமே இருக்கும் என்றும் டெல் நிறுவன மூத்த அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மிக அகண்ட திரை கொண்ட இந்த வகை மடிக்கணினி, வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் என டெல் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக பிரிவு இயக்குனர் கிரிஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.
வெப்-கேமரா, விரல் ரேகையை உணர்ந்து கொள்ளும் திறன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த மடிக்கணினி உள்ளடக்கிய உள்ளது என்று டெல் நிறுவன குறிப்பு தெரிவிக்கிறது.
இதே போல் டெல் அறிமுகப்படுத்தி உள்ள 'XPS 420' என்ற டெஸ்க்டாப் கணினியில், அடோப் ஸ்டூடியோ மென்பொருளை பயன்படுத்த முடியும். இதன் துவக்க விலை ரூ.62,000 (Indian Rs) என அறிவிக்கப்பட்டுள்ளது.

11/13/07

கிளி மாதிரி பெண் !!!! மாப்பிள்ளைக்கு தழும்பு !!!

"என் பையனுக்கு கிளி மாதிரி பொண்ணை பார்த்தது தப்பாப் போச்சு"
"ஏன்?"
"பையனை கொத்திட்டு போயிட்டா."

"டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைச்சிடுவேனா?"
"அது தெரியாது,
ஆனா கடன் தொல்லையில இருந்து நான் பிழைச்சிடுவேன்!"

"என்னங்க மாப்பிள்ளை, உடம்புபூரா ஒரே தழும்பா இருக்கு?"
"நான் அப்பவே சொல்லல... மாப்பிள்ளை வாழ்க்கையில் ரொம்பவும் அடிபட்டவர்னு."

"எல்லா ஓட்டப்பந்தயத்துலயும் நீங்க ஜெயிச்சுடுறீங்களே, எப்படி?"
"என்னை கடன்காரங்க துரத்தறதா நெனைச்சுப்பேன், அப்புறம் வெற்றிதான்!"

"டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்"
"அப்படியா? சும்மாவா இருந்தீங்க."
"இல்ல டாக்டர் இருமிகிட்டேதான் இருந்தேன்."

11/5/07

நவக்கிரகங்களின் சாதக-பாதகங்கள்

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களே நவக்கிரகங்களில் கிரக தகுதி பெற்றவைகள்! ராகு-கேது ஆகிய இரண்டுக்கும் கிரக தகுதி இல்லை! ஏழு கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று அல்லது ஒன்றுடன் பல கூடும்போது ஏற்படும் வலிமை பெற்ற ராஜயோகத்தையும், பலம் குறைந்தால் கிரகத்தால் கஷ்ட நஷ்டமும் தருவார்கள் என்பதுதான் ஜோதிட விதி.
ஒரு ராசியில் ஒன்றுகூடிய கிரகங்களில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அரசனைப்போலவும், கால்நடைகளால் மேன்மை, வண்டி வாகன யோகம், சுக செளகரியம், புகழ்-விருது போன்ற பெருமை முதலியன உண்டாகும். சுக்கிரன் பலம் பெறாத நிலை அமைந்திருந்தால் இவை அனைத்தும் இல்லாத வாழ்வு ஏற்படும்.
ஒரு ராசியில் சேர்ந்த கிரகங்களில் குரு பலம் பெற்றிருந்தால் தெய்வீகமான அணிகலன்கள் அணிந்து கொள்ளும் பாக்யமும், தெய்வீக வித்தைகளில் தேர்ச்சியும், பொன்பொருள் சேர்க்கையோடு புகழ் மிகுந்த வாழ்க்கையும், நல்ல விஷயங்களை உலக மக்களுக்கு போதிக்கும் ஆற்றலும், இதன் மூலம் புகழ் பெரும் பாக்கியமும் ஏற்படும். குருவுக்கு பலம் குறைந்துவிட்டால் சன்னியாச வாழ்க்கை ஏற்படும்.
ஒரு ராசியில் சேர்ந்த கிரகங்களில் சூரியன் பலம் பெற்றிருந்தால் விவசாயத்தில் மேன்மை, அரசு துறையில் புகழ், அறிவுபூர்வமான விஷயங்களில் பிரகாசமான மனநிலை, ஒரு வீடு-ஒரு ஊர், ஒரு நாட்டுக்கு அதிபதியாகும் பாக்கியம். உலக மக்களுக்கு சுகமான வாழ்க்கை நெறியை போதிக்கும் வைராக்கியம் முதலியன ஏற்படும்.
ஒரு ராசியில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் அனேக மக்களுடைய பசிப்பிணியை போக்கும் ஆற்றல், நவரத்தின பொன் ஆபரண சேர்க்கை , இதன் தொடர்பான வாணிப மேன்மை, எல்லாரையும் அன்புடன் அணைத்து வாழும் பாக்கியம் முதலியன உண்டாகும்.