சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களே நவக்கிரகங்களில் கிரக தகுதி பெற்றவைகள்! ராகு-கேது ஆகிய இரண்டுக்கும் கிரக தகுதி இல்லை! ஏழு கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று அல்லது ஒன்றுடன் பல கூடும்போது ஏற்படும் வலிமை பெற்ற ராஜயோகத்தையும், பலம் குறைந்தால் கிரகத்தால் கஷ்ட நஷ்டமும் தருவார்கள் என்பதுதான் ஜோதிட விதி.
ஒரு ராசியில் ஒன்றுகூடிய கிரகங்களில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அரசனைப்போலவும், கால்நடைகளால் மேன்மை, வண்டி வாகன யோகம், சுக செளகரியம், புகழ்-விருது போன்ற பெருமை முதலியன உண்டாகும். சுக்கிரன் பலம் பெறாத நிலை அமைந்திருந்தால் இவை அனைத்தும் இல்லாத வாழ்வு ஏற்படும்.
ஒரு ராசியில் சேர்ந்த கிரகங்களில் குரு பலம் பெற்றிருந்தால் தெய்வீகமான அணிகலன்கள் அணிந்து கொள்ளும் பாக்யமும், தெய்வீக வித்தைகளில் தேர்ச்சியும், பொன்பொருள் சேர்க்கையோடு புகழ் மிகுந்த வாழ்க்கையும், நல்ல விஷயங்களை உலக மக்களுக்கு போதிக்கும் ஆற்றலும், இதன் மூலம் புகழ் பெரும் பாக்கியமும் ஏற்படும். குருவுக்கு பலம் குறைந்துவிட்டால் சன்னியாச வாழ்க்கை ஏற்படும்.
ஒரு ராசியில் சேர்ந்த கிரகங்களில் சூரியன் பலம் பெற்றிருந்தால் விவசாயத்தில் மேன்மை, அரசு துறையில் புகழ், அறிவுபூர்வமான விஷயங்களில் பிரகாசமான மனநிலை, ஒரு வீடு-ஒரு ஊர், ஒரு நாட்டுக்கு அதிபதியாகும் பாக்கியம். உலக மக்களுக்கு சுகமான வாழ்க்கை நெறியை போதிக்கும் வைராக்கியம் முதலியன ஏற்படும்.
ஒரு ராசியில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் அனேக மக்களுடைய பசிப்பிணியை போக்கும் ஆற்றல், நவரத்தின பொன் ஆபரண சேர்க்கை , இதன் தொடர்பான வாணிப மேன்மை, எல்லாரையும் அன்புடன் அணைத்து வாழும் பாக்கியம் முதலியன உண்டாகும்.
No comments:
Post a Comment