இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதால் மன உளைச்சல் ஏற்படும் என்று டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மன நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் பின் ஹாஸ் டேனன் என்பவர் ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்துள்ளார்.
உலகம் முழுதும் இணையதளத்தை பயன்படுத்துவோரில் 10 சதவீதம் பேர் இணையதள அடிமைகளாக உள்ளனர் என்று இவர் மேற்கொண்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
புகைப்பழக்கத்திற்கு அடிமை, மது பழக்கத்திற்கு அடிமை, காபிக்கு அடிமை போன்று இப்போது இந்த இணையதளத்திற்கு அடிமையாவதும் ஒரு நோய்க்கூறாக வளர்ந்து வருகிறது என்று டாக்டர் டேனன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்டர்நெட் அடிக் ஷன் டிஸ்ஸார்டர் என்று அவர் குறிப்பிடும் இந்த நோயால் பலருக்கு மிதமானது முதல் தீவிர மன உளைச்சல் ஏற்படுகிறது என்று அவர் கூறுகிறார்.
இந்த நோய் உண்மையிலேயே ஒருவரை பீடித்திருக்கிறதா என்பதை அறிய மற்ற சில அடிமைப் பழக்கம் போலவே இதனையும் வகைப்படுத்த வேண்டியுள்ளது என்கிறார். அதாவது போதைப்பழக்கம், சூதாட்டத்திற்கான விழைவு, அதிகப்படியான காமத்திற்கான விழைவு ஆகியவற்றுடன் இந்த இணையதள அடிமை நோயையும் வகைப்படுத்த வேண்டியுள்ளது என்று கூறுகிறார் டாக்டர் டேனன்.
ஒரு சிலர் தொடர்ந்து செய்த வேலையையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பர். அதாவது எப்போதாவது எதையாவது சுத்தம் செய்து கொண்டே இருப்பது. வீட்டில் தண்ணீர் கொஞ்சம் தீர்ந்தாலும் உடனுக்குடன் அதனை நிரப்பி வைப்பது போன்ற அப்ஸஸிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டர் (Obsessive Compulsive Disorder) வகையில் இந்த இணையதள மோக நோயையும் மன நோய் நிபுணர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.
எனக்கெண்டால் தொடர்ந்து பயன்படுத்துவதால் மன உளைச்சல் ஏற்படுவதில்லை உங்களுக்கு ?
No comments:
Post a Comment