rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

5/13/10

நாய்களுக்கான இரத்த வங்கி


ஆசியாவில் நாய்களுக்கான முதலாவது இரத்த வங்கி சென்னையில்

துரித நகரமயமாதல் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தல் காரணமாக வீட்டு வளர்ப்பு விலங்குகள் விபத்தில் சிக்குதல் மற்றும் காயமடைதல் அதிகரித்துள்ளன.

ஆகவே அவ்வாறான சந்தர்ப்பங்களில் அத்தகைய விலங்குகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு அவற்றுக்கான இரத்த சேமிப்பு அவசியமாகிறது. அந்த வகையில் ஆசியாவிலேயே நாய்களுக்கான முதலாவது இரத்த வங்கி சென்னையில் தற்போது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

வீதிகளைக் கடக்கும் போதும், அடுக்குமாடி வீடுகளில் இருந்து விழுவதன் மூலமும் நாய்கள் அடிக்கடி காயமடைகின்றன. ஆகவே அவற்றுக்கான அறுவைச் சிகிச்சைக்கான போதிய இரத்தம் உடனடியாக கிடைக்காவிட்டால் அவை இறக்கும் வீதமும் அதிகரிக்கும் என்றும் டாக்டர். தங்கராஜு கூறுகிறார்.

ஒரு வயது முதல் 8 வயது வரையிலான மற்றும் சுமார் 20 கிலோ எடையுடைய நாய்கள் இங்கு இரத்ததானம் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவெங்கிலும் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அழைத்து வரப்படும் நாய்களில் 10 வீதம் விபத்துக்களால் காயமடைந்த நிலையிலேயே வருகின்றன.

நன்றி:BBC

2 comments:

Anonymous said...

சீமான் தம்பி படத்துல சொல்லுவாரு ,மான் செத்தா
ஜெயிலு மனுசன் செத்தா பெயிலு ,என்னாட நடக்குது இந்த
நாட்டுல ,டேய் லட்ச கணக்கா இலங்கையிலே செத்துக்கொண்டு
இருக்கான் உன்னக்கு நாய் ரத்த வங்கி ,உங்க தலையிலே குண்டு விழ .mugilan.

Sweatha Sanjana said...

I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .