என்னடா இவன் இப்படி ஒரு குண்டை தூக்கி போடுறான் எண்டு நினைக்கிறது விளங்குது. நான் சொல்லவந்த விசயம் தொலைபேசி தொல்லையை. Google கனடா, அமரிக்காவிற்கு இலவச குரல் அழைப்பை வழங்க தொடங்கிவிட்டது. இவ்இரு நாடுகளுக்கும் மெபைல் மற்றும் தரைவழி இணைப்புக்களுக்கு இலவசம்.
கிழமைக்கு ஒருதடவை கோல் எடுக்கிற சனம் (அடிக்கடி தம்பி எவ்வளவு நேரமாச்சு என கேட்டு) இனிஅடிக்கடி எடுத்து அவங்களை வதைக்கும்.
இருநாட்டிற்கும் 2ருபா என அழைப்பை வழங்கிவந்த கொமினிக்கேசன் ஆக்களை இனி தம்பி Net2Call என கேட்காம Internet Browsing இருக்கோ எண்டுதான் கேப்பினம்.
Gmail பற்றி தெரியாத அல்லது அதை வச்சிருக்காத பெரியவை கணக்கை உருவாக்கி தரும்படி கொமினிகேசன் ஆக்களை வறுத்தெடுப்பினம்.
சரி எப்படி கோல் எடுக்கிறது எண்டு பார்ப்போம்.
1.உங்களது Gmail கணக்கில் உட்புகவும்
2.கீழே திரைவெட்டில் உள்ளவாறு Chat பகுதியிற்கு கீழே Call phone என்றதை அழுத்தவும்.
3.கீழே உள்ளவாறு ஓர் Dial pad தெரியும் அங்கு call செய்யவேண்டிய நம்பரை கொடுத்து Call பொத்தானை அழுத்தி வதைக்க ஆரம்பிக்கவேண்டியது தான்.
No comments:
Post a Comment