பிரபல தேடுபொறி (Search Engine) தளமான கூகிள் இணையத்தை நடத்தி வரும் கூகிள் நிறுவனம், நாசாவின் அலுவலகத்தில் தனது புதிய ஆய்வு மற்றும் மேம்பாட்டு (ஆர்&டி) மையத்தை அமைக்க உள்ளது.இதற்காக அமெரிக்காவின் மவுண்டன் வியூ பகுதியில் உள்ள நாசாவின் ஏமீஸ் ஆய்வு மையத்தில் உள்ள 42.2 ஏக்கர் இடத்தை அடுத்த 90 ஆண்டுகளுக்கு கூகிள் நிறுவனம் வாடகைக்கு வாங்கியுள்ளது.
அந்த இடத்திற்கு வாடகையாக கூகிள் சார்பில் 3.66 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்றும், வரும் 2013ம் ஆண்டு இந்த ஆர்&டி மையம் கட்டும் பணி துவக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 12 மில்லியன் சதுரடி பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்த மையத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.






No comments:
Post a Comment