rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

6/10/08

வேலைவாய்ப்புக்கான வாசலாகி விட்ட வலைப்பதிவுகள்

இணைய தளங்களின் அபரிமிதமான வளர்ச்சியாலும், விளம்பர வருவாய் ஈட்டுவதற்காகவும் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு இலவச வலைப்பதிவுத் தளங்களை பல இணையதள நிறுவனங்கள் உருவாக்கி அது இன்று மிகப்பெரிய ஒரு ஊடகமாகவே வளர்ந்து நிற்கிறது.
பிளாக்குகள் என்று அழைக்கப்படும் வலைப்பதிவுத் தளங்கள் என்றாலே சிலருக்கு எரிச்சல் ஏற்படலாம். வெட்டியாகபொழுது போக்கும் நபர்களே வலைப்பதிவுகளில் எழுதுவார்கள் என்று கருதும் போக்கும் உள்ளது. மாறாக வலைப்பதிவுத் தளங்களில் ஒரு விவகாரம் குறித்த கருத்துப் பகிர்வுகள் ஆரோக்கியமானதே என்று கருதும் போக்கும் உள்ளது. இவையெல்லாம் நாம் அறிந்ததே.
பிளாக்குகளை பொறுத்தவரை நாம் அறியாத பகுதி ஒன்றும் உள்ளது. அதாவது தங்களது வலைப்பதிவு தளங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்கள் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.
நாம் சாதரணமாக உருவாக்கும் பயோ-டேட்டா வெறும் ஒரு எழுத்து வடிவமாகவே உள்ளது. அதன் மூலம் உங்கள் ஆளுமைகள், எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவற்றை ஒருவர் அறிய முடியாது.
ஆனால் வலைப்பதிவில் உங்கள் குரல் உலகம் முழுவதும் கேட்கிறது. உங்களின் அரிய குணங்கள், ஒரு பிரச்சினையை அணுகும் விதம், உங்கள் பணித்திறன் ஆகியவை உங்கள் வலைப்பதிவு மூலம் தெரிய வரும்போது, நல்ல வேலைக்கான சந்தர்ப்பங்களையும் அது உருவாக்கி விடுகிறது.
வலைப்பதிவுதான் தற்போது புது வடிவ பயோ-டேட்டா என்று கூறுகின்றனர் சில மேலை நாட்டு வலைப்பதிவாளர்கள்.
நானும் பாருங்கோ இப்படித்தான்

No comments: