rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

6/30/08

வாகனங்களை கவனமாக செலுத்துங்கள் (சிந்தனைக்கு)

இதய நோய் உள்ளவர்கள் கடைசிப்படங்களை பார்ப்பதை தவிருங்கள். இவை பார்வைக்கமட்டுமல்ல சிந்தனைக்குமே...........







6/28/08

நூற்றுக்கணக்கான தளங்களை ஒரே திரையில் பார்க்கும் வசதி

எந்த ஒரு இணையத்தளம் எமக்கு பிடித்திருந்தாலும் அல்லது இன்னொரு தடவை செல்ல வேண்டும் என எண்ணினாலும் Book mark இல் போடலாம்.
இதற்கு பதிலாக உங்களுக்க பிடித்த தளமெல்லாம் அதன் Iconகளுடன் ஒரு இணையத்தளத்தில் இருந்தால் எப்படி இருக்கும்.
ஆம் அப்பிடி வசதி இருக்குதே.. இணையத்தள மக்கள் அடிக்கடி நாடும் தளங்களை வகை வகையாக பிரித்து அளித்துள்ளது all my faves என்ற இணையத்தளம்.http://www.allmyfaves.com/ .
இவ் இணையத்தளத்தை பார்ப்பவர்கள் கட்டாயமாக தங்களது Home Page ஆக மாற்றி கொள்வார்கள் என்பது உண்மை. சரி Home Page ஆக மாற்றி பார்த்துவிட்து ஒரு பின்னூட்டத்தை போட்டு விடுங்கோ..

6/25/08

என்.எஃப்.சி. (NFC) தொழில் நுட்பம் என்பது என்ன?

இரண்டு தொடர்புக் கருவிகளுக்கு இடையே கம்பியில்லா தொடர்பு பரிமாற்றத்திற்கு வழிவகை செய்யும், ஒரு வகையில் செல்பேசிகளுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட தொழில் நுட்பம் NFC என்று கூறலாம்.
Near Field Communication என்பதன் சுருக்கமே NFC என்று அழைக்கப்படுகிறது.

தற்போது செல்பேசிகளிடையேயான தகவல் பரிமாற்றத்திற்காக பயன்பட்டு வரும் தொழில்நுட்பம் Bluetooth ஆகும். NFC தொழில்நுட்பமானது, இரண்டு செல்பேசிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்தை சாத்தியப்படுத்துகிறது என்றால் Bluetooth பல சாதனங்களுக்கு இடையே தரவுப் பரிமாற்றங்களை சாத்தியமாக்குவது.
ISO 14443 தொழில் நுட்பத்தின் ஒரு எளிய விரிவாக்கமே இந்த NFC தொழில் நுட்பம், Smartcard Interface மற்றும் Reader ஆகியவற்றை ஒரே சாதனத்தில் கொண்டதுதான் NFC.
இது ஏற்கனவே உள்ள ISO14443 Smartcard டுகள் மற்றும் Reader களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதால் ஏற்கனவே பொதுப் பயன்பாடுகளில் எலக்ட்ரானிக் எந்திரங்களுடன் சுலபமாக ஒத்துப்போகும் தன்மை கொண்டது. NFC பெரும்பாலும் செல்பேசிகளில் பயன்படுத்துவதற்காகவே கண்டு பிடிக்கப்பட்டதாகும்.
மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்குங்கோ: http://www.nfc-forum.org/home

6/11/08

உலகின் அதிவேக கணனி உருவாக்கம்

அமரிக்காவானது அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொள்ளும் முகமாக உலகிலேயே அதிவேகமாக இயங்கும் கணனியொன்றை வடிவமைத்துள்ளதாக அமரிக்க சக்திவள திணைக்களம் அறிவித்துள்ளது.
இக் கணனியானது ஒரு செக்கனுக்கு 1000 திரில்லியன் கணிப்பீடுகளை மேற்கொள்ளும் திறண் உடையது.
நியுமெக்சிக்கோவிலுள்ள லொஸ் அலமொஸ் தேசிய ஆய்வு கூடத்திலுள்ள இக்கணனியானது அமரிக்க அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு மட்டுமல்லாது உலகளாவிய சக்திச் சவால்களுக்குத் தீர்பனவாகவும் அமைவதாக கூறப்படுகின்றது.
உலகில்உள்ள 6 பில்லியன் மக்கள் சாதாரண கணிப்பானைப் பயன்படுத்தி வருடத்திலுள்ள அனைத்து நாட்களிலும்24 மணிநேரம் உளைத்து 46 வருடங்களில் மேற்கொள்ளும் கணிப்பீட்டை இந்த "ரோட்ரன்னர்" கணனி ஒரு நாளில் நிறைவேற்றும் வல்லமையைக் கொண்டு விளங்குகிறது. அப் அப்பா தலையை சுற்றுகிறது.


6/10/08

வேலைவாய்ப்புக்கான வாசலாகி விட்ட வலைப்பதிவுகள்

இணைய தளங்களின் அபரிமிதமான வளர்ச்சியாலும், விளம்பர வருவாய் ஈட்டுவதற்காகவும் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு இலவச வலைப்பதிவுத் தளங்களை பல இணையதள நிறுவனங்கள் உருவாக்கி அது இன்று மிகப்பெரிய ஒரு ஊடகமாகவே வளர்ந்து நிற்கிறது.
பிளாக்குகள் என்று அழைக்கப்படும் வலைப்பதிவுத் தளங்கள் என்றாலே சிலருக்கு எரிச்சல் ஏற்படலாம். வெட்டியாகபொழுது போக்கும் நபர்களே வலைப்பதிவுகளில் எழுதுவார்கள் என்று கருதும் போக்கும் உள்ளது. மாறாக வலைப்பதிவுத் தளங்களில் ஒரு விவகாரம் குறித்த கருத்துப் பகிர்வுகள் ஆரோக்கியமானதே என்று கருதும் போக்கும் உள்ளது. இவையெல்லாம் நாம் அறிந்ததே.
பிளாக்குகளை பொறுத்தவரை நாம் அறியாத பகுதி ஒன்றும் உள்ளது. அதாவது தங்களது வலைப்பதிவு தளங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்கள் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.
நாம் சாதரணமாக உருவாக்கும் பயோ-டேட்டா வெறும் ஒரு எழுத்து வடிவமாகவே உள்ளது. அதன் மூலம் உங்கள் ஆளுமைகள், எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவற்றை ஒருவர் அறிய முடியாது.
ஆனால் வலைப்பதிவில் உங்கள் குரல் உலகம் முழுவதும் கேட்கிறது. உங்களின் அரிய குணங்கள், ஒரு பிரச்சினையை அணுகும் விதம், உங்கள் பணித்திறன் ஆகியவை உங்கள் வலைப்பதிவு மூலம் தெரிய வரும்போது, நல்ல வேலைக்கான சந்தர்ப்பங்களையும் அது உருவாக்கி விடுகிறது.
வலைப்பதிவுதான் தற்போது புது வடிவ பயோ-டேட்டா என்று கூறுகின்றனர் சில மேலை நாட்டு வலைப்பதிவாளர்கள்.
நானும் பாருங்கோ இப்படித்தான்

நாசாவில் ஆர்&டி மையம் அமைக்கிறது கூகிள்

பிரபல தேடுபொறி (Search Engine) தளமான கூகிள் இணையத்தை நடத்தி வரும் கூகிள் நிறுவனம், நாசாவின் அலுவலகத்தில் தனது புதிய ஆய்வு மற்றும் மேம்பாட்டு (ஆர்&டி) மையத்தை அமைக்க உள்ளது.
இதற்காக அமெரிக்காவின் மவுண்டன் வியூ பகுதியில் உள்ள நாசாவின் ஏமீஸ் ஆய்வு மையத்தில் உள்ள 42.2 ஏக்கர் இடத்தை அடுத்த 90 ஆண்டுகளுக்கு கூகிள் நிறுவனம் வாடகைக்கு வாங்கியுள்ளது.
அந்த இடத்திற்கு வாடகையாக கூகிள் சார்பில் 3.66 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்றும், வரும் 2013ம் ஆண்டு இந்த ஆர்&டி மையம் கட்டும் பணி துவக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 12 மில்லியன் சதுரடி பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்த மையத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

6/3/08

டொஸிபா வின் தென்கிழக்காசிய குறியீட்டு தூதுவர் - New Ambassador For Toshiba

டொஸிபாஇ பிரபல இந்தியத் திலையுலக நட்சத்திரம் வித்தியாபாலனை தனது தென் கிழக்காசிய குறியீட்டு தூதுவராக தெரிவு செய்துள்ளது.
தென் கிழக்காசிய பிராந்தியத்தில் டொஸிபா வின் உற்பத்திப் பொருட்களையும் சேவைகளையும் பிரபல்யப்படுத்துவவதற்கு இந்த நியமனம் பெரிதும் உதவும் என்பது டொஸிபாவின் நம்பிகக்கையாகும்.
டொஸிபா இப்பொழுது அதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய படைப்புக்களைச் சந்தைக்கு அறிமுகப்பபடுத்தியுள்ளது. வித்தியா பாலன் இப் பிராந்தியத்தில் ஏராளமான ரசிகர்களையும் ஆதரவாளார்களையும் கொண்டுள்ளார் என்பதால் அவர் எம்முடன் இணைந்திருப்பது எமது உற்பத்திப் பொருட்களை பாவனையாளர்கள் மத்தியில் சந்தைப்படுத்த பெரும் உந்துசக்தியாக அமையும் என்று டொஸிபா சிங்கப்பூர் பிறைவேட் லிமிட்டெட்டின் சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் முகாமையாளர் மேரி லிம் தெரிவித்தார்.