வலையுலகம் வாழ்வின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. மின்னஞ்சல் என்பது தொடர்பு சாதனங்களில் மற்ற எந்த வடிவங்களையும் விட அத்தியாவசியமான ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஆனால் பாதுகாப்பு என்ற ஒரு விவகாரம் மட்டும் இன்னமும் அதன் உச்சத்தை எட்டவில்லை.
ஆம்! மோசடி மற்றும் வைரஸ் பரப்பும் இணையதளங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. 28 மின்னஞ்சல்களுக்கு ஒரு மின்னஞ்சல் என்ற விகிதத்தில் வைரஸ்கள் தாக்குகின்றன என்று மெசேஜ் செக்யூரிட்டி சேவை வழங்கும் நிறுவனமான மெசேஜ் லாப்ஸின் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஸ்டாம்வோர்ம் என்ற புதிய வைரஸ், இணைய தபால் அட்டை மற்றும் யூ டியூப் வீடியோக்களை தனது தாக்குதல் ஊடகமாக பயன்படுத்துகிறது. இந்த ஸ்டார்ம்வோர்ம் வைரஸ் உலகம் முழுதும் 18 லட்சம் கணினிகளை தாக்கியுள்ளது.
மோசடி சமிக்ஞைகளை உள்ளடக்கிய இணைப்புகளுடன் வரும் இ-மெயில்கள் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 19.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஜூலை மாதத்தில் 0.5 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மாடியோவ் .... கவனமாக இருங்கள்.
No comments:
Post a Comment