rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

9/12/07

சில்வர்லைட் 1.0 - Microsoft அறிமுகம்

இணையதள இன்டர்ஃபேஸ் பயன்பாடுகளின் அடுத்த கட்ட அறிமுகமாக சில்வர்லைட் என்ற பயன்பாட்டை Microsoft அறிமுகம் செய்துள்ளது.

மல்ட்டி மீடியா பயன்பாடுகளுக்கு உகந்த இந்த சில்வர்லைட் அடுத்த மே மாதத்திற்குள் 200 மில்லியன் நிர்மாணங்களை எட்டிவிடும் என்று Microsoft நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வெப் இன்டர்ஃபேஸ் டிசைனில் அடோப் பிளாஷுடன் சில்வர்லைட் கடும் போட்டிக்கு தயாராகி வருகிறது. இது குறிப்பாக ஆடியோ மற்றும் வீடியோவில் அதிக கவனம் செலுத்துகிறது என்று Microsoft ன் மென்பொருள் பிரிவின் தலைமை வடிவமைப்பாளர் ரே ஒஸ்ஸி தெரிவித்துள்ளார்.

ஆனால் எதிர்காலத்தில் டாட் நெட்டில் இணையத்திற்காக புரோகிராம்களை உருவாக்க இது உதவும் என்று அவர் மேலும் தெரிவிக்கையில் கூறினார்.

பயனாளர்களின் நோக்கத்திற்கேற்ப இது பிளாஷ் போலவே செயல்படுகிறது. இந்த பிளக்-இன் அப்ளிகேஷனை ஒருவர் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

இது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ஃபயர் ஃபாக்ஸ் மற்றும் சஃபாரி ஆகிய பிரவுசர்களில் கிடைக்கும். டவுன்லோடு செய்த பிறகு ஒரு சிலவர்லைட் பயன்பாடு உள்ளடங்கிய இணையப் பக்கத்தை திறந்து கொள்ளலாம்.

உதாரணமாக டஃபிடி (Taffiti) என்ற பரிசோதனை தேடல் இன்டர்ஃபேஸ் (Search Interface) திறக்கும். இந்த டஃபிடி இன்டர்ஃபேஸ் மரம் போன்ற வரைபடம் திரையில் தோன்றும். இது திறனுள்ள ஒரு பணியிடத்தை நமக்கு அளிக்கும்.
ஆனால் சில்வர்லைட்டை நுகர்வோர்களிடம் சேர்ப்பிக்க விண்டோஸ் அப்டேட்டை பயன்படுத்த மாட்டோம் என்று microsoft கூறியுள்ளது. மாறாக உள்ளடக்க அல்லது பொருளடக்கம் வழங்குவோர் மற்றும் Microsoft .com பயன்படுத்துவோம் என்று கூறியுள்ளது.


மேஜர் லீக் பேஸ்பால் மற்றும் ஃபாக்ஸ் மூவிஸ் ஆகியவை சில்வர்லைட் பயன்பாட்டை உபயோகப்படுத்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் என்டர்டெய்ன்மென்ட் டுனைட், தி ஹோம் ஷாப்பிங் நெட்வொர்க், வேட்ல்ட் வைடு ரெஸ்லிங் என்டர்டெய்ன்மென்ட் (WWE), மற்றும் வீடியோ பகிர்வு இணையதளமான பிரேக் டாட் காம் ஆகியவற்றை சில்வர்லைட் பொருளடக்க வழங்குவோருக்காக சேர்த்துள்ளதாய் Microsoft அறிவித்துள்ளது.

என்டர்டெய்ன்மென்ட் டுனைட், சில்வர்லைட் அடிப்படையிலான இணையதளங்களை உருவாக்கி, எம்மி விருதுகள் (Emmy Awards) மற்றும் பிற நிகழ்வுகளை முக்கிய அம்சங்களாக்கவுள்ளது.சில்வர்லைட் உதவியுடன் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் லைவ் அப்ளிகேஷன்கள் பலவற்றை பயனாளர்கள் சிறந்த முறையில் பயன்படுத்த மேம்படுத்தவுள்ளதாக Microsoft தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் சில்வர்லைட் உள்ள சிறந்த தேடல் சாதனத்தை (Search Tool) அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த புதனன்று சில்வர்லைட் 1.0 வுடன் சில்வர்லைட் என்கோடிங் மற்றும் பப்லிஷிங் டூல் பயன்பாடு ஒன்றையும் சேர்த்து அறிமுகப்படுத்தியுள்ளது. இது எக்ஸ்ப்ரஷன் என்கோடர் 1.0 என்று அழைக்கப்படுகிறது.

No comments: