rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

9/21/07

செல்பேசிகளால் உடல்நலத்திற்கு கேடில்லை

செல்பேசிகளில் அதிக நேரம் பேசினால் மூளைப் புற்றுநோய் ஆபத்து ஏற்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் செல்பேசிகளால் ஏற்படுகிறது என்று எச்சரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் மொபைல் டெலிகம்யூனிகேஷன்ஸ் அன்ட் ஹெல்த் ரிசர்ச் புரோகிராம் மேற்கொண்ட ஆய்வில் செல்பேசி உபயோகத்திற்கும் மூளை புற்றுநோய்க்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளது.
இது தவிர செல்பேசிகளின் சிக்னல்கள் மூளை செயல்பாட்டை பாதிக்கும் என்ற செய்தியையும் இந்த ஆய்வு மறுத்துள்ளது. இருப்பினும் நீண்ட நாட்களுக்கு செல்பேசிகளை உபயோகிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்குமா என்ற கேள்விக்கு இந்த ஆய்வு பதில் அளிக்கவில்லை.
ஏனெனில் இந்த ஆய்வில் ஒரு 10 ஆண்டுகளுக்கு செல்பேசிகளை உபயோகித்து வரும் பங்கேற்பாளர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். எனவே பல ஆண்டுகள் செல்பேசிகளை பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து பல சீரிய ஆய்வுகள் தேவை என்று இந்த ஆய்வு பரிந்துரை செய்துள்ளது.
குழந்தைப் பருவ புற்றுநோய், மூளைப் புற்றுநோய், ரத்த அழுத்தம், மற்றும் மூளையின் பொதுவான செயல்பாடு ஆகியவற்றில் செல்பேசிகளின் பங்களிப்பு என்ன என்பதை ஆய்வு செய்ய 28 தனியான ஆய்வுகளை இந்த ஆய்வு மையம் மேற்கொண்டது.
சமீபத்தில் இஸ்ரேலின் வீஸ்மான் விஞ்ஞான கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் செல்பேசியில் இருந்து உருவாகும் மிகக் குறைந்த அளவிலான கதிர்வீச்சு மூளையில் இயற்கையாக ஏற்படும் திசுப்பிளவை தடுக்கின்றது என்றும், இதனால் டியூமர் அல்லது கட்டி என்று அழைக்கப்படும் புற்று நோய்க்கு அடிப்படையான விவகாரம் ஒன்று மூளையில் ஏற்படலாம் என்றும் தெரிவித்திருந்தது.

No comments: