rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

9/12/07

ஆன்லைன் டெஸ்க்டாப்கள்: புரட்சி

இன்டர்நெட் இணைப்பு மட்டும் இருந்தால்போதும், நீங்கள் செல்லும் இடத்திலெல்லாம், உங்கள் கணினியின் டெஸ்க்டாப்களை அணுகலாம். புதிதாக வாங்கிய கணினியில் லாக் ஆன் செய்யும்போதும் அல்லது பிரயாணத்தில் இருக்கும்போதும் உங்களது கணினித் தகவல்கள் உங்களுக்காக காத்திருக்கும்.

அதாவது ஒருவருடைய அனைத்து தகவல்களையும் ஆன்லைனில் வைத்திருக்கும் ஆபரேஷன் சிஸ்டம்தான் ஆன்லைன் டெஸ்க்டாப்கள் என்று சுருக்கமாக வர்ணிக்கலாம்.

தகவல் தொழில்நுட்ப புரட்சியில் அடுத்த மிகப்பெரிய கட்டம் இந்த ஆன்லைன் டெஸ்க்டாப்கள் என்று கூறப்படுகிறது. நிவியோ மற்றும் ரெட் ஹேட் (Red Hat) என்ற இரண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இத்தகைய ஆய்விற்காக ஏகப்பட்ட பணத்தை முதலீடு செய்துவருகிறது.

இணையதள பயனாளர்கள் இது பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த கணினியின் தகவல்களை மொபைல் ஃபோன் உட்பட பல கணினிகளுக்கு எடுத்துச் செல்லமுடியும் என்பது மிக மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்புதான் என்பதை மறுக்க முடியாது.

கணினிகளுக்கிடையே தகவல்களை மாற்றுவது பெரும் பிரச்சனையாக இருக்கும்போது இந்த ஆன்லைன் டெஸ்க்டாப் பெரிதும் உதவும்.

மென்பொருள், ஃபைல்கள் ஆகியவை பயனாளர்களின் சொந்த கணினிகளிலோ அல்லது ஃபைல் சர்வர்களில் மட்டுமோ இயங்காது.

மாறாக, அனைத்து கணினியின் அனைத்து அப்ளிகேஷன்கள், தரவு மற்றும் மின்னஞ்சல் ஆகியவை ஒரு தரவு நிர்வாக மையத்திலிருந்து வழங்கப்படும். இதன்மூலம் தகவல் தொழில்நுட்பம் மையமாக்கப்படுவதோடு எளிமையாக்கப்படுகிறது.

நன்றி: MSN

No comments: