rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

5/23/08

கணனி உதிரிகளை அழிக்கும் முறை -burnout on computer hardware

வன்பொருட்களை அழிக்க இப்படியும் ஒரு வழிவகையும் உண்டு.நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்...
ஆனால் செலவு கொஞ்சம் அதிகமாகும் (ரயர் தேய்வடையும்)



5/11/08

புது கணனி வடிவமைப்பு

எங்களுடைய ஊரில் "தீனா" எனும் பெயருடைய விஞ்ஞானி இருக்கிறார்.எப்பெழுதும் வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டே இருப்பார்.இப்படி செய்ததில் ஒன்றுதான் இது.
ASUS தாய்ப்பலகை பெட்டியில் வடிவமைத்துள்ளார்.காசும் மிச்சம்தான் பாருங்கோ.cooling fan கூட இணைத்துள்ளார்.வன்தட்டை சரியாக வைக்க முடியவில்லை என்று விடுப்பிற்கு பேட்டி அளிக்கும்போது ஆதங்கப்பட்டார்.உங்களுக்கு தெரிந்த யோசனையை விடுப்பினூடக தெரிவியுங்கோ.




4/11/08

அதிவேக மெமரி சிப் தயார்

செல்போன் மற்றும் மொபைல் பயன்பாட்டிற்கான அதிவேக ஒரு ஜிகாபைட் மெமரி சிப்-ஐ தயாரித்திருப்பதாக தென் கொரியாவின் ஹைனிக்ஸ் செமிகண்டக்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் 2-வது மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹைனிக்ஸின் இந்த சிப் ஆனது, விநாடிக்கும் சுமார் 800 மெகாபைட் டேட்டாக்களை திரட்டும் என்றும், தற்போது சந்தையில் கிடைக்கும் சிப்களை விட புதிய சிப் டேட்டாவை பெறும் திறன் அதிவேகமானது என்றும் அந்நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.
மொபைல் பயன்பாடுகளின் விரிவான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இந்த சிப் இருக்கும் என்றும், வேகமான செயல்பாட்டு திறனுக்காகவும், அதிவேக மெமரிக்காகவும் இது பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய சிப்களை அதிகளவில் ஹைனிக்ஸ் தயாரிக்கும் என்றும், நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இவை விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

3/11/08

ஆப்பிள் ஐபோன் மூலம் மேம்படுத்தப்பட்ட ஈ-மெயில்

ஆப்பிள் இங் நிறுவனத்தின் ஐபோன் மூலம் பாதுகாப்பான-மேம்படுத்தப்பட்ட வகையிலான மின்னஞ்சல்கள் அனுப்பும் வசதி விரைவில் பயனர்களுக்கு கிடைக்க உள்ளது.
மிகவும் பிரபலம் அடைந்த ஆப்பிள் இங், ஐபோனில், மின்னஞ்சல் அனுப்புவதில் சில குறைபாடுகள் இருந்து வந்தன.
இதற்கிடையே ஆப்பிள் இங்-ன் ஐபோனில் அடுத்தகட்ட சாஃப்ட்வேர் அப்டேட் செய்யப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷனுடன் மென்பொருள் பரிமாற்ற முயற்சியில் ஆப்பிள் இங் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் வர்த்தகப் பயன்பாட்டிற்கான பாதுகாப்பான மின்னஞ்சல்களை ஐபோன் மூலமாகவே அனுப்ப முடியும்.
என்றாலும் மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர் எப்போது ஐபோனில் சேர்க்கப்படும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை மோஷன் லிமிடெட்டின் பிளாக்பெர்ரி மற்றும் பாம் நிறுவனத்தின் ட்ரியோ ஸ்மார்ட் போன் ஆராய்ச்சிக்குப் போட்டியாக அமையும்.

2/19/08

2020ல் மனித அறிவுக்கு இணையான கணினி

மனித அறிவுக்கு இணையாக செயல்படக் கூடிய கணினி, வரும் 2020ம் ஆண்டுக்குள் சாத்தியமாகும் என அமெரிக்க கம்ப்யூட்டர் வல்லுனர் குருரே கர்ஸ்வில் தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடந்த அறிவியில் முன்னேற்றத்திற்கான அமெரிக்க கூட்டமைப்பு ஆண்டுக் கூட்டத்தில் பேசிய போது இதனை தெரிவித்த அவர், 'அக்சலர்ரேட்டிங் ரிட்டர்ன்ஸ் விதி' (law of accelerating returns) இதற்கு பேருதவியாக இருக்கும் என தாம் நம்புவதாக கூறினார்.
தொழில்நுட்பத்துறை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால், மனித அறிவை மிஞ்சும் நவீன கணினியும் உருவாக்கப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்றும் குருரே தெரிவித்தார்.
மனிதனின் உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் முதுமை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்தால், மனித ஆயுளை நீட்டிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


1/21/08

கிரிக்கற்








நண்பர் இ-மெயிலில் அனுப்பியிருந்தார் அது உங்களுக்கும்