ஆப்பிள் இங் நிறுவனத்தின் ஐபோன் மூலம் பாதுகாப்பான-மேம்படுத்தப்பட்ட வகையிலான மின்னஞ்சல்கள் அனுப்பும் வசதி விரைவில் பயனர்களுக்கு கிடைக்க உள்ளது.
மிகவும் பிரபலம் அடைந்த ஆப்பிள் இங், ஐபோனில், மின்னஞ்சல் அனுப்புவதில் சில குறைபாடுகள் இருந்து வந்தன.
இதற்கிடையே ஆப்பிள் இங்-ன் ஐபோனில் அடுத்தகட்ட சாஃப்ட்வேர் அப்டேட் செய்யப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷனுடன் மென்பொருள் பரிமாற்ற முயற்சியில் ஆப்பிள் இங் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் வர்த்தகப் பயன்பாட்டிற்கான பாதுகாப்பான மின்னஞ்சல்களை ஐபோன் மூலமாகவே அனுப்ப முடியும்.
என்றாலும் மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர் எப்போது ஐபோனில் சேர்க்கப்படும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை மோஷன் லிமிடெட்டின் பிளாக்பெர்ரி மற்றும் பாம் நிறுவனத்தின் ட்ரியோ ஸ்மார்ட் போன் ஆராய்ச்சிக்குப் போட்டியாக அமையும்.
No comments:
Post a Comment