rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

12/29/07

அவுட்சோர்சிங் துறையில் பெருகும் உடற்கோளாறுகள்

கால்சென்டர் உள்ளிட்ட அவுட்சோர்சிங் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் உடல் நிலையில் கோளாறுகள் பெருகி வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கால்சென்டர்கள் தவிர மென்பொருள் தயாரிப்புத் துறை, மெடிகல் டிரான்ஸ்கிரிப்ஷன் மற்றும் இன்னபிற அவுட்சோர்சிங் துறைகளில் ஆண்கள், பெண்கள் உட்பட 1.6 மில்லியன் இளம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
20லிருந்து 30 வயதுக்குள் மட்டுமே இருக்கும் இந்த ஊழியர்கள் மற்ற துறையில் இதே வயதில் பணியாற்றும் ஊழியர்களைக் காட்டிலும் அதிகம் சம்பாதிக்கின்றனர்.
ஆனால் இவர்களுக்கு தூக்கமின்மை, இருதய நோய், மன உளைச்சல் ஆகிய தொந்தரவுகள் அதிகம் ஏற்படுகிறது. இதோடு மேலும் முக்கியமாக குடும்பத்துடன் இவர்களால் ஒட்டுதல் ஏற்படுத்தி கொள்ள முடிவதில்லை. இதனால் குடும்பத் தகராறுகள் ஏற்படுவதாக பல சமூகவியலாளர்கள் கூறி வருகின்றனர்.
சக்தி வாய்ந்த ஒரு பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்து கொண்டிருப்பதில், தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் பெருகும் வருவாய் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், ஊழியர்களின் ஆரோக்கியம் இந்த துறைக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று சிந்திக்க தொடங்கியுள்ளனர்.
2005 ஆம் ஆண்டில் இருதய நோய், வாதம், நீரிழிவு ஆகிய நோய்களால் மட்டுமே உற்பத்தித் திறன் 9 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆரோக்கியம் குறித்த இத்தகைய போக்கு தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் உற்பத்தித் திறன் இழப்பு 200 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு உயரும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கென்றே பிரத்யேகமான மருத்துவக் கொள்கையை அறிமுகம் செய்யவேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அமர்ந்தபடியே பணியாற்றுவதாலும், பணிச்சுமை உள்ளிட்ட பணியிட சூழல்களால் மன அழுத்தமும், இருதய நோயும், ஜீரணக் கோளாறுகளும், உடல் எடை கூடுதலும் ஏற்படுகின்றன.

12/13/07

இன்டர்நெட்டினால் ஏற்படும் மன உளைச்சல்

இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதால் மன உளைச்சல் ஏற்படும் என்று டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மன நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் பின் ஹாஸ் டேனன் என்பவர் ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்துள்ளார்.
உலகம் முழுதும் இணையதளத்தை பயன்படுத்துவோரில் 10 சதவீதம் பேர் இணையதள அடிமைகளாக உள்ளனர் என்று இவர் மேற்கொண்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
புகைப்பழக்கத்திற்கு அடிமை, மது பழக்கத்திற்கு அடிமை, காபிக்கு அடிமை போன்று இப்போது இந்த இணையதளத்திற்கு அடிமையாவதும் ஒரு நோய்க்கூறாக வளர்ந்து வருகிறது என்று டாக்டர் டேனன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்டர்நெட் அடிக் ஷன் டிஸ்ஸார்டர் என்று அவர் குறிப்பிடும் இந்த நோயால் பலருக்கு மிதமானது முதல் தீவிர மன உளைச்சல் ஏற்படுகிறது என்று அவர் கூறுகிறார்.
இந்த நோய் உண்மையிலேயே ஒருவரை பீடித்திருக்கிறதா என்பதை அறிய மற்ற சில அடிமைப் பழக்கம் போலவே இதனையும் வகைப்படுத்த வேண்டியுள்ளது என்கிறார். அதாவது போதைப்பழக்கம், சூதாட்டத்திற்கான விழைவு, அதிகப்படியான காமத்திற்கான விழைவு ஆகியவற்றுடன் இந்த இணையதள அடிமை நோயையும் வகைப்படுத்த வேண்டியுள்ளது என்று கூறுகிறார் டாக்டர் டேனன்.
ஒரு சிலர் தொடர்ந்து செய்த வேலையையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பர். அதாவது எப்போதாவது எதையாவது சுத்தம் செய்து கொண்டே இருப்பது. வீட்டில் தண்ணீர் கொஞ்சம் தீர்ந்தாலும் உடனுக்குடன் அதனை நிரப்பி வைப்பது போன்ற அப்ஸஸிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டர் (Obsessive Compulsive Disorder) வகையில் இந்த இணையதள மோக நோயையும் மன நோய் நிபுணர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.
எனக்கெண்டால் தொடர்ந்து பயன்படுத்துவதால் மன உளைச்சல் ஏற்படுவதில்லை உங்களுக்கு ?