ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தொழில் செய்து தங்களுடைய வாழ்க்கையில் பயணிக்கின்றனர். ஆனால் அதில் சிலரே தாங்கள் செய்து வரும் தொழிலில் முன்னேற்றமடைகின்றனர். இதற்கு காரணம், அவர்கள் தங்களுடைய பிறந்த தேதிக்கேற்ற தொழிலை தேர்ந்தெடுக்காததே.
இதோ இங்கே உங்களுக்காக ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களுக்கும் ஏற்ற தொழில்களைக் கொடுத்துள்ளேன். இதைப் படித்து உங்களுக்கேற்றத் தொழிலைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்...
1, 10, 19, 28-ம் தேதிகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அரசாங்க தொடர்புடைய தொழில் செய்வதன் மூலம் வெற்றி பெறலாம். அரசு உதவியுடன் செய்யக்கூடிய தொழில்கள், அரசாங்க தொடர்புடைய ஒப்பந்த தொழில்களில் ஈடுபடுவர். சிலர் அரசு உயர் பதவிகளிலும் இருப்பர். மருத்துவ தொழிலும், பொறியியல் துறையும் இதில் அடங்கும்.
2, 11, 20, 29-ம் தேதிகளில் பிறந்தவர்கள் கலை தொடர்புடைய தொழிலில் ஈடுபடுவதன் மூலம் வெற்றி பெறலாம். கதை, கட்டுரை, கவிதை, எழுதுதல், ஓவியம் வரைதல், நடிப்பு தொழில் ஆகியவற்றில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். இதனால் பத்திரிகை, சினிமா போன்ற துறைகளில் இவர்கள் பிரகாசிப்பார்கள். இந்த எண்காரர்கள் விவசாயம், ஜவுளி வியாபாரம், நகை போன்ற ஆபரணங்கள் விற்பனை செய்யும் கடைகளையும் தொடங்குவதால் மிகுந்த வருவாயை பெற்று வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
3, 12, 21, 30-ம் தேதிகளில் பிறந்தவர்கள் அரசியல் துறையில் மிகவும் உயர்ந்த பதவிகளை பெற முடியும். எம்.எல்.ஏ., எம்.பி. மற்றும் மத்திய அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசாங்க நிறுவனங்களிலும் சிலருக்கு உயர் பதவி கிடைக்கும். ராணுவம் போன்ற துறைகளில் தலைமை பொறுப்புகளை ஏற்பதற்கான வாய்ப்பு அமையும். சிலர் ஆன்மீக துறையிலும் ஈடுபாடு கொண்டிருப்பர்.
4, 13, 22, 31-ம் தேதிகளில் பிறந்தவர்கள் விஞ்ஞானம், பொறியியல் தொடர்பான துறையில் ஈடுபடுவதன் மூலம் பிரகாசமான எதிர்காலத்தை பெற முடியும். ஜோதிடம் பார்த்தல், கணிதம் தொடர்பான தொழிலிலும் ஈடுபடலாம். இவர்களுக்கு கைத்தொழில் மிகவும் கைகொடுக்கும். அதன் மூலம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். மரவேலை தொடர்பான தொழில்களிலும் நல்ல வருமானத்தை பெற முடியும். எனவே மரத்தால் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் தொழிலையும் மேற்கொள்ளலாம்.
5, 14, 23-ம் தேதிகளில் பிறந்தவர்கள் வியாபாரம் செய்வதே சிறந்தது. அடுத்தவரிடம் வேலை பார்ப்பதால் இவர்களின் அதிர்ஷ்டம் இவர்கள் முதலாளிகளுக்கு சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே முடிந்த வரை சொந்த தொழிலில் ஈடுபடுவதே நல்லது. இந்த எண்ணில் பிறந்தவர்கள் தனியார் நிறுவனங்களில் குறிப்பாக வியாபார தொடர்புடைய நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தால்தான் வெற்றிபெற முடியும். அரசாங்கம் தொடர்புடைய பணிகளில் இவர்களுக்கு முன்னேற்றம் இருக்காது.
6, 15, 24-ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு கலைத்துறையில் அதிகம் ஈடுபாடு கொண்டிருப்பர். எனவே தங்கள் கற்பனை திறனுக்கு ஏற்ப பெண்கள் உபயோகிக்கும் ஆடை ஆபரணங்களை தயார் செய்வதாலும், அவற்றை விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். மேலும் நடிப்பு, இசை, நடனம் போன்ற கலைகளில் ஈடுபடுவதன் மூலம் இவர்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க முடியும்.
7, 16, 25-ம் தேதிகளில் பிறந்தவர்கள் ஆன்மீக சிந்தனை நிறைந்து காணப்படுவர். இவர்கள் சமய சொற்பொழிவாளராக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. மரம் தொடர்பான பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்து வாழ்க்கை சிறந்து விளங்கும். டி.வி., ரேடியோ போன்ற கருவிகளை தயாரித்தல், பழுதுபார்த்தல் ஆகிய தொழிலையும் மேற்கொள்ளலாம். மருத்துவம், தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் நல்ல வளர்ச்சியை காணலாம்.
8, 17, 26-ம் தேதிகளில் பிறந்தவர்கள் சொந்த தொழிலை நம்பி இருப்பதைவிட உத்தியோகம் பார்ப்பதே சிறந்தது. அதன் மூலம் தான் இவர்கள் வாழ்வில் உயர்வடைய முடியும். குறிப்பாக அரசாங்கம் தொடர்புடைய உத்தியோகங்களினால் நல்ல வளர்ச்சியை பெற முடியும். இவர்களில் சிலர் இசை துறைகளிலும் வெற்றி பெற முடியும். பஸ், லாரி போன்ற வாகனங்கள் மூலம் டிராவல்ஸ் நடத்துபவர்களும் நல்ல லாபம் பெற முடியும்.
9, 18, 27-ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு பொறியியல் தொடர்பான் பெரிய பொறுப்புகளை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் பணமும், புகழும் தாராளமாக கிடைக்கும். எந்திரங்கள் பழுதுபார்த்தல் மற்றும் தயாரிக்கும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் வாய்ப்பும் இருக்கும். அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களில் இவர்கள் நல்ல பதவியை பெற்று வாழ்க்கையில் வேகமாக முன்னுக்கு வருவர்.
1 comment:
முடிவாக என்னை வேலையை விட சொல்லுறியள்
Post a Comment