மனித மூளையின் அமைப்பை ஒத்து வடிவமைக்கப்பட்டவைகள் தான் கணினிகள். ஆனால் மனிதனின் அத்தனை திறன்களும் அதற்கு இருக்கிறதா என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகிறோம்.
உதாரணமாக கணிகள் தானாகவே ஜோக்குகளை புரிந்து கொள்ளுமா? உருவாக்குமா? என்று நாம் கேட்கலாம்.
இது விளையாட்டு அல்ல! நிஜமாகவே கணினிகள் ஜோக் அடிக்கும், அதற்குத் தக்க நிரல்களை அதற்கு நாம் வழங்கினால் கணினிகளும் ஜோக் அடிக்கும் என்று அமெரிக்காவின் சின்சினாட்டி பல்கலைக் கழக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
ஆம்! கணினி ஒன்றில் நகைச்சுவை உணர்வை புரொகிராம் செய்து வடிவமைத்துள்ளனர் இந்த ஆய்வாளர்கள்.
நாம் கணினிகளுடன் உறவாடி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; எனினும் மனிதர்கள் பேசுவது போல், தொடர்பு படுத்துவது போல் கணினிகள் செய்வதில்லை.
நாம் இயற்கையாக பேசும் மொழியை கணினிகளும் புரிந்து கொண்டு கையாளத் துவங்கினால் அது மிகப்பெரிய விஷயம் என்று சின்சினாட்டி பல்கலைக் கழக கணினி விஞ்ஞானத் துறையில் ஆய்வு செய்து வரும் ஜூலியா டெய்லர் கூறுகிறார்.
பேராசிரியர் லாரன்ஸ் மாஸ்லாக் என்பவருடன் இணைந்து ஜூலியா டெய்லர் புரொகிராம் ஒன்றை உருவாக்கி உள்ளார். உலகத்தின் ஒட்டு மொத்த அறிவையும் ஒரு கணினியில் ஏற்றுவது என்பது சற்றே கூடுதலான கற்பனைதான். ஆனால் இவர்கள் தற்போது குழந்தைகள் ஜோக்குகளை கணினியே கூறுமாறு உருவாக்கியுள்ளனர்.
அதாவது சிலேடை மற்றும் சில நாக் - நாக் (Knock-knock) ஜோக்குகளில் வருவது போன்ற வார்த்தைகளை வைத்து இதனை உருவாக்கியுள்ளனர்.
டிஸ்கவரி செய்தி அறிக்கையின் படி இந்த புரோகிராம் இரு பகுதிகளைக் கொண்டது. குழந்தைகள் மொழி அகராதியில் இருந்து திரட்டப்படும் அறிவு அடிப்படை தரவுகள், சில குழந்தைகளுக்கான புத்தகங்களில் இருந்து வார்த்தைகள் மற்றும் இந்த வார்த்தைகள் எவ்வாறு ஒலிக்கின்றன? எப்படி உச்சரிக்கப்படுகின்றன? மற்றும் அவற்றின் அர்த்தம் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளும் ஒரு பதின்முறை கணக்கு.
அறிவுத் தரவுப் பெட்டகம் ஆன்டாலஜி (ஒன்டொலொக்ய்)என்று அழைக்கப்படுகிறது. இது முற்றிலும் புதிய மற்றும் சிக்கலான அணுகும்றை கொண்டது என்று கூறுகிறார், ஹாகியா என்ற இணையதள தேடல் எந்திர நிறுவன தலைமை விஞ்ஞான அதிகாரி கிறிஸ்டியன் ஹெம்பிள்மேன்.பொதுவாக நாம் பயன்படுத்தும் தேடல் எந்திரங்களில் 'கீ வேர்டு'கள் அல்லது சொற்றொடர்கள் மூலம் தேடல் பணி நடைபெறுகிறது, ஆனால் ஹகியா தேடல் எந்திரம் வார்த்தைகள் அல்லாமல் அதன் அர்த்தங்கள் அடிப்படையில் தேடல் முடிவுகளை நமக்கு அளிக்கிறது.லட்சக்கணக்கான வார்த்தைகளை இது அலசுகிறது, இதில் எந்த வார்த்தையைச் சுற்றி எந்த வார்த்தைகள் அதிகமாக வருகின்றன என்று ஆய்வு செய்கிறது.உதாரணமாக, நாம் 'பேங்க்' (BANK) என்று கொடுத்தால் அது வங்கிகளைக் குறிக்கும் அல்லது நதிக்கரையை குறிக்கும். அதேபோல் டெல்லர், செக், மற்றும் அக்கவுண்ட் போன்ற வார்த்தைகள் நிதி தொடர்பான விஷயங்களைக் குறிக்கும். மீன், நீர் போன்ற் வார்த்தைகள் பேங்க் என்பதின் மற்றொரு பொருளைக் குறிக்கும்.தற்போது அறிவுப் பெட்டகம் என்ற 'ஆன்டாலஜி' ஏற்படுத்தப்படும் போது ஒரு குறிப்பிட்ட உலகில் நிகழும் அனைத்து விஷயங்களையும், ஒன்றுடன் ஒன்று அது எவ்வாறு தொடர்புடையது என்பதையும் தேடி கொடுத்துவிடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.இதேபோல் குழந்தைகள் ஜோக்குகளை முதலில் உருவாக்கியிருக்கிறார்கள்.கணினியின் புரிதலை பரிசோதனை செய்ய, ஆய்வு மாணவி ஜூலியா டெய்லர் கணினியில் பிரதி ஒன்றை ஏற்றினார். அந்த பிரதி ஜோக்கா? இல்லையா? என்று அந்த புரோகிராம் மூலம் தெரிந்து கோண்டார்.தற்போது மேலும் நுட்பமான ஜோக்குகளை கணினி உணர்ந்து கொள்ளவும் அது தானாகவே ஜோக்குகளை உருவாக்கவும் பெரிய அளவில் அறிவுத் தரவுகளை தயாரித்து வருகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.கணினியும் நம்மோடு சக மனிதர்களைப்போல் பேசும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்றே தெரிகிறது!
1 comment:
நல்லா பீதியை கிளப்பிறீக.......
Post a Comment