ஜப்பான் நாட்டின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களான டொயோட்டாவும், சோனி கார்ப்பரேஷன் நிறுவனமும் கூட்டாகச் சேர்ந்து ஒற்றை இருக்கையிலான ரோபோவை வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளன.
டோக்கியோவில் இத்தகவலை இரு நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.
ஐபோ மற்றும் சைல்டுலைக் ஓரியோ தொழில்நுட்பத்திற்காக சோனி கார்ப்பரேஷன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாக சோனி நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் டோமியோ டகிஸாவா தெரிவித்தார்.
தொழில்நுட்ப விற்பனை, காப்புரிமை உள்ளிட்டவை சோனி நிறுவனத்திடம் இருந்து இந்த ஆண்டு துவக்கத்தில் டொயோட்டா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. அடுத்த தலைமுறை டிரான்ஸ்போர்ட்டரை உருவாக்க இரு நிறுவனங்களும் ஒப்புக் கொண்டாலும், அதற்கான நிதி பரிமாற்றம் குறித்து வெளியிடவில்லை.
No comments:
Post a Comment