rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

8/31/07

கடி ஜோக்ஸ்

வணக்கம் பாருங்கோ எனது நண்பர் ஒருவர் கடி ஜோக்ஸ் அனுப்பியுள்ளார் நீங்களும் பாருங்கோவன்

சின்னா: அந்த கடி ஜோக்ஸ் சொல்லுறவர் எங்கு வேலை செய்யிறார்?

கைப்புள்ள: பிளேடு கம்பனியில

8/30/07

அண்ணையின்ர ஓட்டத்தை பாருங்கோவன்
இவருக்கு ஒரே வெக்கையாக இருக்குதாம் அதுதான். சட்டன பார்த்தால் நம்ம தேவா மாதிரி இருக்கார்ங்கண்ணா


ஒரே மழை பாருங்கோ அதனால ஒரு புதினமும் எனக்கு கிடைக்கவில்லை.உங்களுக்கு ஏதாச்சும் கிடைச்சால் அனுப்புங்கோ.

ஜாவா ஸ்கிரிப்ட்


அனேகமான தளங்களின் Status bar இல் வசனங்கள் அனிமேசன் செய்யப்பட்டிருப்பதை பாத்திருப்பீங்கள். இவை ஜாவா ஸ்கிரிப்ட்இனால் உருவாக்கப்பட்டவை. இப்பதிவில் ஒரு அனிமேசனை குறிப்பிட்டுள்ளேன்.

மேல்உள்ள script ஜ உங்களது HTML page இன்body tag இனுள் ஒட்டி விட்டு பட்டையை கிளப்புங்கோ.......

8/29/07

ரோபோ தொழில்நுட்பம்

ஜப்பான் நாட்டின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களான டொயோட்டாவும், சோனி கார்ப்பரேஷன் நிறுவனமும் கூட்டாகச் சேர்ந்து ஒற்றை இருக்கையிலான ரோபோவை வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளன.
டோக்கியோவில் இத்தகவலை இரு நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.

ஐபோ மற்றும் சைல்டுலைக் ஓரியோ தொழில்நுட்பத்திற்காக சோனி கார்ப்பரேஷன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாக சோனி நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் டோமியோ டகிஸாவா தெரிவித்தார்.

தொழில்நுட்ப விற்பனை, காப்புரிமை உள்ளிட்டவை சோனி நிறுவனத்திடம் இருந்து இந்த ஆண்டு துவக்கத்தில் டொயோட்டா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. அடுத்த தலைமுறை டிரான்ஸ்போர்ட்டரை உருவாக்க இரு நிறுவனங்களும் ஒப்புக் கொண்டாலும், அதற்கான நிதி பரிமாற்றம் குறித்து வெளியிடவில்லை.