skip to main |
skip to sidebar
கடந்த மாதம் மைக்ரோசொப்ட் நிறுவனம் நடத்திய இணையத் தள தேர்வில் 1000க்கு 842 புள்ளிகளைப் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் உலக சாதனை புரிந்துள்ளார்.
கலை, கவிதை, பாட்டு, ஒவியம், கணனி போன்ற பல துறைகளில் அபரிமிதமான ஆற்றல் பெற்றவர்களுக்கு இளம் வயது சாதனையாளர் விருது வழங்கப்படுவது வழக்கம். இதனை 13 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற முடியும்.
அந்த வகையில், தனது 6ஆவது வயதில் கணனி அனிமேஷன், மல்டிமீடியா துறையில் பல்வேறு படிப்புகளை பூர்த்தி செய்துள்ள லவிணாஸ் (தற்போது 8 வயது) அகிட்பீடியா மற்றும் ரிலையன்ஸ் இணைய உலகம் நடத்திய இணையத் தள தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் கணனித் துறையில் அதி விசேட திறமை விருதும் பெற்றுள்ளார். இவர் கடந்த மாதம் மைக்ரோசொப்ட் நிறுவனம் நடத்திய இணையத் தள தேர்வில் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து உலக சாதனை புரிந்துள்ளார். இதற்காக அவருக்கு எம்.சி.பி.. சான்றிதழ் வழங்கப்பட்டது.
இது குறித்து லவிணாஸ் கூறியதாவது: இது, கணனி பயிலும் மாணவர்களின் கணிக்கும் திறன், ஆங்கிலம் நுண்ணறிவுத் திறன், தொழில் நுட்பதிறன் உள்ளிட்ட பல திறமைகளை சோதிக்கும் தேர்வு ஆகும். இதற்கு 25 முதல் 30 வயதுள்ள மாணவர்கள் தோற்றுவது வழக்கம்.
-நன்றி வீரகேசரி
முன்பு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆர்பாகரிம் ரந்தாவா என்ற சிறுமி தனது 10ஆவது வயதில் இத்தேர்வை எழுதி வெற்றி பெற்றது சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது நான் 8 வயதிலேயே தேர்ச்சி பெற்று உலக சாதனை புரிந்துள்ளேன் என்றார்
No comments:
Post a Comment