rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

8/14/08

Blogger புதிய Gadget களை அறிமுகப்படுத்தியுள்ளது

Microsoft இன் இணையத்தள தேர்வில் உலக சாதனை படைத்த 8 வயது மாணவி


கடந்த மாதம் மைக்ரோசொப்ட் நிறுவனம் நடத்திய இணையத் தள தேர்வில் 1000க்கு 842 புள்ளிகளைப் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் உலக சாதனை புரிந்துள்ளார்.

கலை, கவிதை, பாட்டு, ஒவியம், கணனி போன்ற பல துறைகளில் அபரிமிதமான ஆற்றல் பெற்றவர்களுக்கு இளம் வயது சாதனையாளர் விருது வழங்கப்படுவது வழக்கம். இதனை 13 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற முடியும்.
அந்த வகையில், தனது 6ஆவது வயதில் கணனி அனிமேஷன், மல்டிமீடியா துறையில் பல்வேறு படிப்புகளை பூர்த்தி செய்துள்ள லவிணாஸ் (தற்போது 8 வயது) அகிட்பீடியா மற்றும் ரிலையன்ஸ் இணைய உலகம் நடத்திய இணையத் தள தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் கணனித் துறையில் அதி விசேட திறமை விருதும் பெற்றுள்ளார். இவர் கடந்த மாதம் மைக்ரோசொப்ட் நிறுவனம் நடத்திய இணையத் தள தேர்வில் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து உலக சாதனை புரிந்துள்ளார். இதற்காக அவருக்கு எம்.சி.பி.. சான்றிதழ் வழங்கப்பட்டது.

இது குறித்து லவிணாஸ் கூறியதாவது: இது, கணனி பயிலும் மாணவர்களின் கணிக்கும் திறன், ஆங்கிலம் நுண்ணறிவுத் திறன், தொழில் நுட்பதிறன் உள்ளிட்ட பல திறமைகளை சோதிக்கும் தேர்வு ஆகும். இதற்கு 25 முதல் 30 வயதுள்ள மாணவர்கள் தோற்றுவது வழக்கம்.
-நன்றி வீரகேசரி

முன்பு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆர்பாகரிம் ரந்தாவா என்ற சிறுமி தனது 10ஆவது வயதில் இத்தேர்வை எழுதி வெற்றி பெற்றது சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது நான் 8 வயதிலேயே தேர்ச்சி பெற்று உலக சாதனை புரிந்துள்ளேன் என்றார்

8/12/08

தொலைபேசி செம்மறி ஆடு ஆனால் ?

இப்படங்களை எனது நண்பி ஒருவர் மெயிலுக்கு அனுப்பியிருந்தார்.பல பேர் பார்த்திருக்க மாட்டார்கள். பாக்காதவர்களுக்காக....... செய்து பெரிதாக பார்க்கலாம்.

8/8/08

நல்லூர் முருகன் ஒளிபடம்

சென்ற வருட திருவிழாவின்போது யாழ்பாண இளங்கலைஞர் மன்றத்தால் வெளியிடப்பட்ட இறுவட்டில் இருந்து தருகின்றேன். மற்றைய பாடல்களை பதிவேற்ற நேரம் இல்லாததால் தரமுடியவில்லை. விரைவில் தருகின்றேன்.


நன்றி: இளங்கலைஞர் மன்றம்,யாழ்பாணம்.




8/6/08

புதிய மெயில் எங்கிருந்து வந்தது என கண்டுபிடிப்பது எப்படி?

ஜிமெயிலை தொடர்ந்து பயன்படுத்திவருபவர்களுக்கு spam mail கள் வந்து கொண்டிருக்கும்.இது எங்கிருந்து வந்தது என அறிந்து கொள்ளலாம். இதற்கு வரும் mail ஜ திறந்து கொள்ளவும் அதன் வலது மூலையை பார்த்தால் அங்கு ஒரு அம்புக்குறி இருக்கம் அதை கிளிக் செய்தால் ஒரு மெனு விரியும் அதில் show original ஜ கிளிக் செய்யுங்கள் அங்கு குழப்பமான வரிகள் காணப்படும் அதில் எமக்கு தேவை email அனுப்பப்பட்ட IP முகவரிதான்.அம் முகவரியை coppy பண்ணிவைத்துக்கெள்ளுங்கள் பின்னர் www.who.is என்ற இணையத்தளத்திற்கு வாருங்கள் அங்கு ரைப் செய்யவேண்டிய இடத்தில் paste செய்து கொள்ளுங்கள். உடனடியாக உங்களுக்கு யாரிடமிருந்து mail வந்துள்ளது என அறிந்து கொள்ளலாம்.