skip to main |
skip to sidebar
கணினி தயாரிப்பில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் டெல் நிறுவனம், 15.4 இன்ச் அகலம் உள்ள திரையை கொண்ட மடிக்கணினியை (லேப்-டாப்) அறிமுகப்படுத்தியுள்ளது.'XPS M1530' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மடிக்கணினியின் துவக்க விலை ரூ.53,000 என்றும், இதன் தடிமன் ஒரு இன்ச் மட்டுமே இருக்கும் என்றும் டெல் நிறுவன மூத்த அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.மிக அகண்ட திரை கொண்ட இந்த வகை மடிக்கணினி, வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் என டெல் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக பிரிவு இயக்குனர் கிரிஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.வெப்-கேமரா, விரல் ரேகையை உணர்ந்து கொள்ளும் திறன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த மடிக்கணினி உள்ளடக்கிய உள்ளது என்று டெல் நிறுவன குறிப்பு தெரிவிக்கிறது.இதே போல் டெல் அறிமுகப்படுத்தி உள்ள 'XPS 420' என்ற டெஸ்க்டாப் கணினியில், அடோப் ஸ்டூடியோ மென்பொருளை பயன்படுத்த முடியும். இதன் துவக்க விலை ரூ.62,000 (Indian Rs) என அறிவிக்கப்பட்டுள்ளது.
"என் பையனுக்கு கிளி மாதிரி பொண்ணை பார்த்தது தப்பாப் போச்சு""ஏன்?""பையனை கொத்திட்டு போயிட்டா.""டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைச்சிடுவேனா?""அது தெரியாது, ஆனா கடன் தொல்லையில இருந்து நான் பிழைச்சிடுவேன்!""என்னங்க மாப்பிள்ளை, உடம்புபூரா ஒரே தழும்பா இருக்கு?""நான் அப்பவே சொல்லல... மாப்பிள்ளை வாழ்க்கையில் ரொம்பவும் அடிபட்டவர்னு.""எல்லா ஓட்டப்பந்தயத்துலயும் நீங்க ஜெயிச்சுடுறீங்களே, எப்படி?""என்னை கடன்காரங்க துரத்தறதா நெனைச்சுப்பேன், அப்புறம் வெற்றிதான்!""டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்""அப்படியா? சும்மாவா இருந்தீங்க.""இல்ல டாக்டர் இருமிகிட்டேதான் இருந்தேன்."
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களே நவக்கிரகங்களில் கிரக தகுதி பெற்றவைகள்! ராகு-கேது ஆகிய இரண்டுக்கும் கிரக தகுதி இல்லை! ஏழு கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று அல்லது ஒன்றுடன் பல கூடும்போது ஏற்படும் வலிமை பெற்ற ராஜயோகத்தையும், பலம் குறைந்தால் கிரகத்தால் கஷ்ட நஷ்டமும் தருவார்கள் என்பதுதான் ஜோதிட விதி.ஒரு ராசியில் ஒன்றுகூடிய கிரகங்களில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அரசனைப்போலவும், கால்நடைகளால் மேன்மை, வண்டி வாகன யோகம், சுக செளகரியம், புகழ்-விருது போன்ற பெருமை முதலியன உண்டாகும். சுக்கிரன் பலம் பெறாத நிலை அமைந்திருந்தால் இவை அனைத்தும் இல்லாத வாழ்வு ஏற்படும்.ஒரு ராசியில் சேர்ந்த கிரகங்களில் குரு பலம் பெற்றிருந்தால் தெய்வீகமான அணிகலன்கள் அணிந்து கொள்ளும் பாக்யமும், தெய்வீக வித்தைகளில் தேர்ச்சியும், பொன்பொருள் சேர்க்கையோடு புகழ் மிகுந்த வாழ்க்கையும், நல்ல விஷயங்களை உலக மக்களுக்கு போதிக்கும் ஆற்றலும், இதன் மூலம் புகழ் பெரும் பாக்கியமும் ஏற்படும். குருவுக்கு பலம் குறைந்துவிட்டால் சன்னியாச வாழ்க்கை ஏற்படும்.ஒரு ராசியில் சேர்ந்த கிரகங்களில் சூரியன் பலம் பெற்றிருந்தால் விவசாயத்தில் மேன்மை, அரசு துறையில் புகழ், அறிவுபூர்வமான விஷயங்களில் பிரகாசமான மனநிலை, ஒரு வீடு-ஒரு ஊர், ஒரு நாட்டுக்கு அதிபதியாகும் பாக்கியம். உலக மக்களுக்கு சுகமான வாழ்க்கை நெறியை போதிக்கும் வைராக்கியம் முதலியன ஏற்படும்.ஒரு ராசியில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் அனேக மக்களுடைய பசிப்பிணியை போக்கும் ஆற்றல், நவரத்தின பொன் ஆபரண சேர்க்கை , இதன் தொடர்பான வாணிப மேன்மை, எல்லாரையும் அன்புடன் அணைத்து வாழும் பாக்கியம் முதலியன உண்டாகும்.