rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

8/27/10

கனடா, அமரிக்காவில இருக்கிற எங்கட ஆக்களின்ர பாடு இனி வலு கஸ்ரம்தான்.

என்னடா இவன் இப்படி ஒரு குண்டை தூக்கி போடுறான் எண்டு நினைக்கிறது விளங்குது. நான் சொல்லவந்த விசயம் தொலைபேசி தொல்லையை. Google கனடா, அமரிக்காவிற்கு இலவச குரல் அழைப்பை வழங்க தொடங்கிவிட்டது. இவ்இரு நாடுகளுக்கும் மெபைல் மற்றும் தரைவழி இணைப்புக்களுக்கு இலவசம்.
கிழமைக்கு ஒருதடவை கோல் எடுக்கிற சனம் (அடிக்கடி தம்பி எவ்வளவு நேரமாச்சு என கேட்டு) இனிஅடிக்கடி எடுத்து அவங்களை வதைக்கும்.

இருநாட்டிற்கும் 2ருபா என அழைப்பை வழங்கிவந்த கொமினிக்கேசன் ஆக்களை இனி தம்பி Net2Call என கேட்காம Internet Browsing இருக்கோ எண்டுதான் கேப்பினம்.
Gmail பற்றி தெரியாத அல்லது அதை வச்சிருக்காத பெரியவை கணக்கை உருவாக்கி தரும்படி கொமினிகேசன் ஆக்களை வறுத்தெடுப்பினம்.

சரி எப்படி கோல் எடுக்கிறது எண்டு பார்ப்போம்.
1.உங்களது Gmail கணக்கில் உட்புகவும்
2.கீழே திரைவெட்டில் உள்ளவாறு Chat பகுதியிற்கு கீழே Call phone என்றதை அழுத்தவும்.














3.கீழே உள்ளவாறு ஓர் Dial pad தெரியும் அங்கு call செய்யவேண்டிய நம்பரை கொடுத்து Call பொத்தானை அழுத்தி வதைக்க ஆரம்பிக்கவேண்டியது தான்.

5/13/10

நாய்களுக்கான இரத்த வங்கி


ஆசியாவில் நாய்களுக்கான முதலாவது இரத்த வங்கி சென்னையில்

துரித நகரமயமாதல் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தல் காரணமாக வீட்டு வளர்ப்பு விலங்குகள் விபத்தில் சிக்குதல் மற்றும் காயமடைதல் அதிகரித்துள்ளன.

ஆகவே அவ்வாறான சந்தர்ப்பங்களில் அத்தகைய விலங்குகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு அவற்றுக்கான இரத்த சேமிப்பு அவசியமாகிறது. அந்த வகையில் ஆசியாவிலேயே நாய்களுக்கான முதலாவது இரத்த வங்கி சென்னையில் தற்போது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

வீதிகளைக் கடக்கும் போதும், அடுக்குமாடி வீடுகளில் இருந்து விழுவதன் மூலமும் நாய்கள் அடிக்கடி காயமடைகின்றன. ஆகவே அவற்றுக்கான அறுவைச் சிகிச்சைக்கான போதிய இரத்தம் உடனடியாக கிடைக்காவிட்டால் அவை இறக்கும் வீதமும் அதிகரிக்கும் என்றும் டாக்டர். தங்கராஜு கூறுகிறார்.

ஒரு வயது முதல் 8 வயது வரையிலான மற்றும் சுமார் 20 கிலோ எடையுடைய நாய்கள் இங்கு இரத்ததானம் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவெங்கிலும் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அழைத்து வரப்படும் நாய்களில் 10 வீதம் விபத்துக்களால் காயமடைந்த நிலையிலேயே வருகின்றன.

நன்றி:BBC

3/14/10

Intel PC இல் Mac OS X ஆ?? முடியும் ,முடியும்

எனது நெடுநாளைய ஆதங்கம் Intel PC இல Mac ஐ install பண்ணமுடியாதா என? அது இப்ப ஒரு மாதிரி நிறைவேறியாச்சு.
எனது iMac இன் திரைவெட்டுக்களை கிழே தருகின்றேன். விரைவில் எப்படி install பண்ணுவது என்ற பதிவையும் இடுகின்றேன்.







8/5/09

உலகின் முதலாவது SDXC Memory Card அறிமுகமாகியுள்ளது.

Toshiba நிறுவனம் உலகின் முதலாவது SDXC Memory Card இனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கொள்ளளவு 64 gigabyte (GB) கும் மேலதிக விபரத்திற்கு இங்கே வரவும்.

6/14/09

Digital கடிகாரத்தின் ஆரம்பகாலம்

இன்று Digital கடிகாரத்தை எவ்வாறு எல்லாம் பயன்படுதத்துகின்றோம்.எத்தனை அளவுகளில் கூட.கடிகாரத்தின் ஆரம்பகாலம் எப்படி இருந்திருக்கும்?

இப்படித்தான்.

இப்போது மாதிரி LCD திரை எல்லாம் கிடையாது display tube கள்தான் இவை 1971 களில் கண்டுபிடிக்கப்பட்டன.அமரிக்காவில் பொருத்தப்பட்ட இவ் கடிகாரங்கள் ஆரம்பத்தில் $275 ஆக விற்கப்பட்டது. power supply யும் சேர்த்து.

4/17/09

Google குளிர்களி


மேலதிகத்திற்கு இங்கே வரவும்

4/4/09

மரத்தின் மேல் Restaurant

பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் இதோ படத்தை பாருங்கள்.....இது தாய்லாந்தில் உள்ளது